Showing posts with label உலகின் மிக அழகான பெண்கள்: ஐஸ்வர்யாராய்க்கு 4-வது இடம். Show all posts
Showing posts with label உலகின் மிக அழகான பெண்கள்: ஐஸ்வர்யாராய்க்கு 4-வது இடம். Show all posts

Saturday, 1 February 2014

உலகின் மிக அழகான பெண்கள்: ஐஸ்வர்யாராய்க்கு 4-வது இடம்

உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார்.

இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை கேத் ஆப்டனுக்கு கிடைத்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3–வது இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்தது. இந்தி நடிகை தீபிகா படுகோனே உலகின் மிக அழகான பெண்கள் போட்டியில் 29–வது இடத்தை பிடித்துள்ளார். 4–வது இடத்தில் தேர்வு செய்ததற்காக ரசிகர்களுக்கு ஐஸ்வர்யாராய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, அழகும் திறமையும் உள்ள பெண்களைப் பற்றிய கருத்து கணிப்பை உலகம் முழுவதும் நான்கு மில்லியன் பேர் ஓட்டளித்து எனக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Like to share?

Blogger Widgets