Saturday 1 February 2014

போலீஸ் நாய் குரைத்ததால் 10 ஆண்டு சிறை தண்டனை

மும்பை: போலீஸ் நாய் குரைத்ததால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் கடந்த 2004-ம் ஆண்டில்
இரட்டைகொலை சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதாதல் போலீஸ் நாய் மூலம் துப்பு துலக்கினர். விசாரணையின் போது அருகில் இருந்த ராஜாராம் பாபர் என்பவரை பார்த்து போலீஸ் நாய் குரைத்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டு சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பாபரும் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. ஹர்தாஸ் மற்றும் அஜய் கத்காரிஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜாராம் பாபர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான சான்றுகளை அளி்க்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.போலீஸ் நாய் இவரை பார்த்து குரைதத்தால் கைது செய்ததாகவும் மற்றும் சில ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இருப்பினும் முறையான ஆதாரங்களை சமர்ப்பி்க்காததும், போலீஸ் நாய் குரைப்பது மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது என்றும் கூறி அவரை உடனடியாக விடுதலை செய்யும் படி தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

Like to share?

Blogger Widgets