ஜப்பான் நாட்டு போர் விமானங்களை வாங்கும் இந்தியா!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..
![]() |
2 விமானங்கள் மட்டும்
முதலில் இரண்டு விமானங்களை வழங்கவும் பின்னர் மீதமுள்ளவற்றை இந்தியாவில்
உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ
வட்டாரங்கள் தெரிவித்தன.
|
டெல்லி: உலகப் போருக்குப் பின் ஜப்பானிடமிருந்து முதன் முதலில் இராணுவ
விமானத்தை வாங்கும் நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. இதன் மூலம் அந்த
நாட்டின் பிரதமர் ஷின்ஜொ அபெ அந்த நாட்டின் வர்த்தக ஒப்பந்தக்காரர்களுக்கு
போர்க் கருவிகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த
தடையை நீக்க வழிபிறந்துள்ளது.
அந்த நாட்டிலுள்ள ஷின்மாய்வா நிறுவனத்தின் நிலம் மற்றும் நீரில் இருந்து
இயங்கக்கூடிய விமானத்தை வாங்குவதற்கான 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
பெருமானமுள்ள விரிவான ஒரு ஒப்பந்தத்தினை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளதாக
இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பல்வேறு விவரங்கள் தெளிவாக செயல் வடிவமாக்கவும் இந்தியாவில் இந்த
விமானத்தை இணைந்து தயாரிக்க மற்றும் பிற விவரங்களை அலசவும்
பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளன.
மத்திய அரசு இதுபோன்ற ஒவ்வொன்றும் 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
மதிப்புள்ள 15 விமானங்களை வாங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment