Friday, 31 January 2014

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் – தீபிகா படுகோனே ஹீரோயின்?

ஜில்லாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜய். துப்பாக்கியை மிஞ்சும் அதிரடியான ஸ்கிரிப்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு இரண்டுவிதமான கெட்டப்பாம். இந்த இரண்டுமே விஜய் இதுவரை நடிக்காத அளவுக்கு மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கெட்டப்பையும் தனித்தனியே அதிக டயம் எடுத்து படமாக்குகிறாராம் முருகதாஸ். இந்த படத்தில் சமந்தாதான் நாயகி என்பது உறுதியான நிலையில், வில்லன் வேடத்தில் நடிக்க சில பாலிவுட் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதற்கிடையே, முருகதாஸ் படத்தை முடித்ததும், யார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குழப்பமாக இருந்து வந்த நிலையில், தற்போது இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனின் படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முருகதாஸ் படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் விஜய், சிம்புதேவன் படத்தில் காமெடியான கதையில் நடிக்கிறாராம். விஜய் படங்களில் இதுவரை இடம்பெறாத வகையிலான ஹைலைட்டான காமெடி காட்சிகள் அப்படத்தில் இடம்பெறுகிறதாம்.
தற்போது ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தை இயக்கி வரும் சிம்புதேவன், அப்படம் விரைவில் வெளியாக இருப்பதால், விஜய் படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் இறங்கப்போகிறாராம்.
இதற்கிடையே, அப்படத்தில் முதலில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில, பின்னர் கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே நடிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இப்போது அதுபற்றி விசாரித்தால், அவர்கள் இருவருமே நடிக்கவில்லை. யாரை கதாநாயகியாக நடிக்க வைப்பது என்ற முடிவே இன்னும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Like to share?

Blogger Widgets