Friday, 31 January 2014

பவர் கட்டான பவர் நடிகர்!

பண மோசடியில் சிக்கி கம்பி எண்ணி விட்டு வந்தபிறகு, அந்த பவர் நடிகரை யாருமே கண்டு கொள்வதில்லையாம். அதனால் லட்டு படத்தில் தன்னை நடிக்க வைத்த வாசனை காமெடியனை சந்தித்து தன்னையும் காமெடி கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்து விட்டாராம் நடிகர்.
ஆனால், பவரை கொஞ்சம் விட்டால் நம்ம மார்க்கெட்டை அவுட் பண்ணி விடுவார். இவர் விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேணடும் என்று ஏற்கனவே உஷாராகி விட்ட வாசனை, ஏறெடுத்துகூட பார்க்கவில்லையாம்.
அதையடுத்து, தன்னிச்சையாக முயற்சி எடுத்த கம்பெனிகளும், திடீர் திடீரென்று ஜெயிலுக்கு போய் விடும் இவரை நம்பி எப்படி சான்ஸ் கொடுப்பது என்று பவரிடம் சிக்காமல் நழுவிக்கொள்கிறார்களாம்.
இதனால், சினிமாவில் என்னைப்போல் ஒரே படத்தில் ஓகோவென்று பேசப்பட்டவரும் இல்லை. அந்த ஒரே படத்திற்கு பிறகு சீபோ என்கிற நிலைக்கு தள்ளப்பட்டவரும் இல்லை என்று தன் நிலையை சொல்லி பரிதாபமாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஆக, பவர் கட்டாகிப்போய் கிடக்கிறார் பவர்.

No comments:

Post a Comment

Like to share?

Blogger Widgets